வழிதெரியாமல் நின்ற பெண்ணை கடத்தி கற்பழித்த போலிஸ்காரர்

வழிதெரியாமல் நின்ற பெண்ணை கடத்தி கற்பழித்த போலிஸ்காரர்

3 mins read

நாகர்கோயில்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழி தெரியாமல் தவித்த பெண்ணுக்கு வழிகாட்டுவதாகவும் வேலை வாங்கித் தருவதாகவும் ஏமாற்றி, கடத்திச் சென்று கற்பழித்த போலிஸ்காரரை தனிப்படைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கருங்கல் பகுதியில் பெற்றோரை இழந்த 23 வயது இளம்பெண் ஒருவர் உறவினர் பாதுகாப்பில் வசித்து வந்தார். இளம்பெண்ணுக்கு உறவினர்கள் சென்னையில் ஓட்டுநர் வேலை பார்க்கும் இளைஞருக்குத் திருமணம் பேசி நிச்சயம் செய்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் வசிக்கும் ஓட்டுநரைப் பார்க்க இளம்பெண் தனியாகச் சென்றார். சென்னைக்குச் சென்ற அந்தப் பெண் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது பற்றி சென்னையில் உள்ள ஓட்டுநரை உறவினர்கள் தொடர்புகொண்டு கேட்டனர். அதற்கு அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருப்பதாகக் கூறி என்னிடம் கைத்தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். அன்று நான், வெளியூர் சவாரி சென்றிருந்தேன். இதனால் அந்தப் பெண்ணை உடனடியாக ஊருக்குப் புறப்பட்டுச் செல்லும்படி கூறினேன் என்றார்.

அந்தப் பெண் ஊர் திரும்பாத தால், காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள் குமரி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி ஸ்ரீநாத்திடம் மனு கொடுத்தனர். அவர், காணாமல்போன பெண்ணைக் கண்டு பிடிக்கத் தனிப்படை அமைத்தார். தனிப்படை காவல்துறையினர் பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஓட்டுநரை அழைத்து விசாரித்தனர். அவரிடம் பெண் பேசிய கைத்தொலைபேசி எண்ணைக் கைப்பற்றி அந்த எண்ணுக்குச் சொந்தமான ஆளைக் கண்டுபிடிக்க முயன்றனர்.

இதில் அந்த எண்ணுக்குரியவர் சென்னையைச் சேர்ந்த பெண் எனத் தெரிய வந்தது. அந்தப் பெண்ணின் பின்னணி குறித்துத் தனிப்படை காவல் துறையினர் விசாரித்தனர். இதில் அந்த சென்னை பெண் விபசாரக் கும்பலுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்தது.

அவர்கள், சென்னையிலேயே தங்கியிருந்து விபசாரக் கும்பலுடன் தொடர்புடைய பெண்­ணைக் கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, அவர், குமரி பெண்ணை சென்னையில் பணிபுரியும் போலிஸ்காரர் ஒருவரிடம் ஒப்படைத்தது தெரியவந்தது. குமரி தனிப்படை காவல்துறையினர் சென்னைப் போலிஸ்காரரையும் கண்டுபிடித்து விசாரித்தனர். இதில், குமரி பெண்­ணைக் கடத்திச் சென்றது விப சாரக் கும்பலைச் சேர்ந்த பெண் ணும், சென்னை போலிஸ்கார ரும்தான் எனத் தெரியவந்தது.

மீட்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி காவல் துறையினரிடம் கூறினார்.

"எனக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஓட்டுநரைத் தேடி சென்னைக்குச் சென்றேன். கோயம் பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஓட்டுநரின் வீட்டிற்குச் செல்ல வழி தெரியாமல் நின்றேன். அப்போது பெண் ஒருவர் என்னிடம் வந்து விவரம் கேட்டார். அவரிடம் என்னைப்பற்றி கூறி னேன். அந்தப் பெண், என்னை ஓட்டுநர் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

"சென்னையிலேயே வேலை வாங்கித் தருவதாகக் கூறினார். அவருக்குத் தெரிந்த போலிஸ்காரர் ஒருவரிடம் என்னை ஒப்படைத்தார்.

"அந்தப் போலிஸ்காரர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுஎன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். அவரிடம் இருந்து ஒருவழியாக தப்பி வெளியே வந்தேன்.

"சாலையில் நடந்துசென்ற போது, இன்னொருவர் என்னைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

"பின்னர் ஊருக்கு வர ரயில் நிலையம் வந்தபோது, குமரி மாவட்ட காவல்துறையினர் என் னைக் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்," என்றார்.

சென்னையில் போலிஸ்காரர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.