சென்னை: அதிகாலை வேளையில் மெரினா கடற்கரைச் சாலையில் பந்தயம் கட்டி இருசக்கர வாக னத்தில் சாகசங்கள் செய்தபோது ஒருவர் விபத்தில் சிக்கி பலியானார். இது தொடர்பாக 15 பேர் கைதாகி உள்ளனர்.
கல்லூரி மாணவர்களும் இளையர்களும் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. போலி சாரிடம் பிடிபடும்போது இவர்க ளுக்கு அபராதம் விதிக்கப்பட்டா லும் பந்தயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.
இந்நிலையில் நேற்று அதி காலை மெரினா கடற்கரைப் பகுதியில் இளையர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டனர். அப்போது 19 வயதான சாந்தகுமார் தனது நண்பர் பாலாஜியுடன் பெசன்ட் நகர் கடற்கரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றார்.
வாகனத்தை பாலாஜி ஓட்டிச் சென்ற நிலையில் இவர்களை 4 இருசக்கர வாகனங்களில் 8 நண்பர்கள் பின்தொடர்ந்தனர். நேதாஜி சிலை அருகே சென்ற போது சாந்தகுமார் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மாநகரப் பேருந்து மீது பயங்கர வேகத்தில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சாந்தகுமார் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். அவரது நண்பர் பாலாஜி படுகாய மடைந் தார். இதற்கிடையே நேற்று அதிகாலை கடற்கரைப் பகுதி யில் மேலும் 50 பேர் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்ட தாக போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக 15 பேர் கைதாகி உள்ளனர்.

