பாலத்தை சீர்படுத்தவும் குடிநீர் கேட்டும் நூதன போராட்டம்

பாலத்தை சீர்படுத்தவும் குடிநீர் கேட்டும் நூதன போராட்டம்

1 mins read

திருவாரூர்: குடிநீர் வழங்கக் கோரி குழாய்க்கு மாலை அணி வித்து கிராம மக்கள் ஒப்பாரியுடன் கூடிய நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் திருவா ரூரில் நிகழ்ந்துள்ளது.

மன்னார்குடி அருகே உள்ள செருமங்களம் கிராமத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படு கிறது.

இதையடுத்து நேற்று முன் தினம், குடிநீர் வழங்கக் கோரி, தண்ணீர்க் குழாய்க்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் கிராம மக்கள் தங்களின் அவல நிலையை வெளிப்படுத்தினர்.

இதேபோல் கோவில்பட்டி நக ராட்சிக்குட்பட்ட மாதா கோவில் சாலையில் உடைந்த பாலத்தை சீர் செய்ய கோரி சிபிஎம் கட்சியினர் சார்பில் நூதனபோராட்டம் நடைபெற்றது.

அச்சமயம், பாலத்தின் அருகே தேங்காய் பழம் வைத்து, அவற்றுக்கு மாலை அணிவித்து பூசை செய்யும் நூதன போராட்டத் தில் பொதுமக்களும் கலந்து கொண்டனர். பாலத்தை சீரமைக் கும் வரை போராட்டம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.