ஜெ. அன்பழகன்: ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து திமுக விடுதலை ஆவது உறுதி

ஜெ. அன்பழகன்: ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து திமுக விடுதலை ஆவது உறுதி

2 mins read

சென்னை: 8 வழி பசுமை வழிச் சாலைத் திட்டத்தை மக்களோடு இணைந்து திமுகவும் எதிர்க்கும் என அக்கட்சி எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், ஸ்பெக்ட்ரம் வழக்கை எந்த வகையில் விசா ரித்தாலும் அதிலிருந்து திமுக விடுதலையாகும் என குறிப்பிட்டார்.

"சிபிஐ தனி நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், அந்த வழக்கை மத்திய அரசு தற்போது கையில் எடுத்துள்ளதுடன், வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத் தில் கோரி உள்ளது.

"எங்களைப் பொறுத்தவரை எந்த வகையில் எப்படி விசாரித்தா லும் 2ஜி வழக்கிலிருந்து திமுக விடுதலை ஆகும்," என்றார் ஜெ. அன்பழகன்.

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பெரிய அளவில் வாக்குகளைப் பெறவில்லை என்று குறிப்பிட்ட அவர், கமல்ஹாசன் மக்களுக்காக உழைக்கக் கூடிய தலைவர் இல்லை என்பது அவரது செயல்பாடுகளின் மூலம் நன் றாகத் தெரிகிறது என்றார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சிப் பதவி கொடுப்பது தொடர் பாக தலைமை அவசரப்படாது என்றும் இது தொடர்பாக ஊடகங் கள்தான் தவறான தகவல்களை வெளியிடுவதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.

"8 வழிச் சாலைத் திட்டத்திற்கு ஏற்பட்ட தடையை எதிர்த்து மத் திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.

"தற்போது அதிமுக கூட்டணி யில் இடம்பெற்றுள்ள அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து என்ன சொல்லப் போகிறார்?" என்று கேள்வி எழுப்பினார் ஜெ. அன்பழகன்.

தற்போது தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் மக்களுக்கு தண்ணீர் லாரிகள் மூலம் தற்போது இலவசமாக குடிநீர் விநியோகித்து வருவதாகத் தெரிவித்தார்.