சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்த கைகளாகச் செயல்பட்டு வருகின்றனர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கும் துணை முதல் வருக்கும். இடையே எந்தப் பிரச்சி னையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நாகையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட உணவுத்துறை அமைச்சரான காமராஜ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது நாடாளுமன்ற, சட்டப்பேரவை இடைத் தேர்தல் களில் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற எண்ணத் துடனேயே மக்கள் வாக்களித்தி ருப்பதாகக் குறிப்பிட்டார்.
"தேர்தல் முடிவை நாங்கள் இந்தக் கோணத்தில்தான் பார்க்கி றோம். மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கலைக்கப்படும் என்று திமுக வினர் கூறிவந்தனர்.
"மேலும் திமுக ஆட்சி அமையும் எனவும் கூறி மக்களை ஏமாற்றும் வகையில் பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால், திமுகவினரும் அக்கட்சித் தலை வர் மு.க. ஸ்டாலினும் இதில் தோல்வியைச் சந்தித்துள்ளனர்" என்றார் அமைச்சர் காமராஜ்.
முதல்வர், துணை முதல்வ ருக்கு இடையே பிரச்னை நிலவு வதாக ஊடகங்கள்தான் தெரிவிக் கின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், இருவரும் அனைத்து விஷயங்களிலும் இணைந்து செயல்படுவதாகக் கூறினார்.
"இருவரும் இணைந்த கைக ளாக அதிமுக ஆட்சியை வழி நடத்திச் செல்கின்றனர். எனவே, இருவருக்குமிடையே பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பே இல்லை. மோதல், கருத்து வேறுபாடு என்று வெளி யாகும் தகவல்கள் அனைத்துமே பொய்யானவை," என்றார் அமைச்சர் காமராஜ்.
அண்மைக்காலமாக முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாகவும், இதன் எதிரொலியாக அதிமுகவில் மீண் டும் விரிசல்கள் ஏற்படத் துவங்கி யுள்ளது என்றும் பல்வேறு ஊட கங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
இது குறித்து இரு தரப்பிலி ருந்தும் விளக்கம் ஏதும் அளிக்கப் படவில்லை. இந்நிலையில் இருவ ருக்கும் இடையே மோதல் இல்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி யும் கூறியுள்ளார்.

