சேலம்: சமூக வலைத்தளங்களில் பாஜகவினர் குறித்து மீம்ஸ் எனப்படும் கேலிச்சித்திரங்கள், நையாண்டிப் படங்கள் வெளியிடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் குழு ஒன்று அமைக்கப்படும் என பாஜகவின் சேலம் மாவட்ட பொருளாதாரப் பிரிவு தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு வார காலத்துக்குள் இந்த வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும் என்றார் அவர்.
முதலில் மீம்ஸ் வெளியிடுவோரைக் கண்டறிந்து அவர்களின் செயல்பாடு குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுபப்பப்டும் என்றும் அதையடுத்து நீதிமன்றம் மூலம் சட்ட ரீதியான தண்டனை கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுரேஷ் கூறியுள்ளார்.

