தர்மபுரியில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு: கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு: கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

1 mins read

தர்மபுரி: 8 தட பசுமைச் சாலைத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தங்களது எதிர்ப்பைத் பதிவு செய்யும் விதமாக தர்மபுரி மாவட்டம் அரூரில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கப் பிரதிநிதிகள், பசுமை சாலைத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த பிறகும் மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதைக் கண்டிப்பதாகத் தெரிவித்தனர்

தங்களது போராட்டத்துக்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.