சுடச் சுடச் செய்திகள்

விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை, வெயில் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று சமூக ஊடகங்களில் வதந்திகள் பகிரப்படுவதைத் தொடர்ந்து மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்திற்கு உள்ளாகினர்.

ஆனால் சந்தேகங்களைத் தீர்க்கும் வண்ணம் கல்வித்துறை அமைச்சு உண்மை நிலவரத்தை வெளியிட்டுள்ளது.

“மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, திட்டமிட்டபடி ஜூன் 3ஆம் தேதி (இன்று) பள்ளிகள் திறக்கப்படும்,” என்று தெரிவித்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

50 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசாங்க உதவி பெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon