சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு; மக்கள் தவிப்பு

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு; மக்கள் தவிப்பு

1 mins read
0799a40d-eb75-49e1-80b4-499a3b5855ff
சென்னை புறநகர் பகுதியில் தண்ணீருக்காகக் குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள். படம்: ஏஎஃப்பி -

சென்னையில் தண்ணீர் தட்டுப் பாடு மோசமடைந்துள்ள நிலையில் பிற மாநிலங்களில் இருக்கும் தங்கள் உறவினர்களின் வீடு களில் சிறிது நாட்கள் தங்கி விட்டு வரலாம் என அங்கிருக்கும் சிலர் கிளம்பிவிட்டனர்.

ஏற்கெனவே விடுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் சிலர் சில நாட்கள் கழித்து சென்னை திரும்பலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

ஒரு சிலர் கடுமையாகப் பாதிக் கப்பட்டிருக்கும் வட்டாரங்களி லிருந்து சென்னையில் இருக்கும் வேறு வட்டாரத்துக்கு வீடு மாறுகின்றனர்.

நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரத்துக்கு மட்டுமே குழாயில் தண்ணீர் வருவதாக கோடம்பாக்க குடியிருப்பாளர்கள் தெரிவித் துள்ளனர்.

"பத்து நாட்களுக்கு தண்ணீர் இல்லாமல் தவித்தோம். அதனால் பெங்களூரில் உள்ள எனது சகோதரியின் வீட்டிற்கு எனது குடும்பத்துடன் சென்று அங்கு வாரயிறுதியின்போது தங்கி

னேன்," என்று பெருங்குடியில் வசிக்கும் திரு ஸ்ரீகாந்த் கூறினார்.

சென்னைக்கு தண்ணீர் வழங்கும் நான்து ஏரிகளில் நீரின் அளவு வெகுவாகக் குறைந் திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.