ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்ப் புலவர்கள் புறக்கணிப்பு - வைகோ கண்டனம்

சென்னை: தமிழ் நாடு அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்ப் புலவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி இன்று வரையிலும், மதுரை தமிழ்ச்சங்கம், அண்ணா­மலைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் கரந்தைக் கல்லூரி, நா.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, ஒரத்தநாடு கல்வியியல் கல்லூரி, மயிலம் தமிழ்க்கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில், தமிழ் இலக்கியச் செறிவு, தமிழ் இலக்கிய ஆளுமை, இலக்கணப் புலத்தை மேம்படுத்துவதற்காகத் தமிழ் மரபுக் கல்விக் கற்பிக்கப்பட்டு வருகின்றது.

இப்போது, திருச்சி பாரதி­தாசன் பல்கலைக்கழகம், கொடைக்­கானல் அன்னை தெரசா மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும் தமிழ்ப்புலவர்களுக்கான இலக்கிய வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மூன்றாண்டுக் காலம் தமிழ்ப்­புலவர், இளங்கலை இலக்கிய இளையர் (பி.லிட்) படித்து, அதன் தொடர்ச்சியாக 6 மாத தமிழ்ப் புலவர் பயிற்சியும் முடித்தவர்களுக்கு 1987 முதல் அரசுப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அவர்கள், தகுதி நிலை 1, தகுதி நிலை 2 என வகைப்­படுத்தப்பட்டுள்ளனர்.

ஆறாம் வகுப்பு முதல் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் எனப் பேராசிரியர் பி.விருத்தாசலனார், பெரும்புலவர் கி.த.பச்சையப்பன் ஆகியோர் விடுத்த வேண்டு­கோளை ஏற்று, 2009 இல் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபொழுது பிறப்பித்த அரசு உத்தரவின்படி, மேலும் ஆயிரக்­கணக்­கானோர் அரசுப் பள்ளிகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். இவர்கள், இளங்கலை இலக்கிய இளையர் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களாக, புலவர் என்ற தகுதியோடு, தனித்தமிழ் ஆசிரியர்கள் என அழைக்கப்பட்டு வந்தனர்.

அதன்படி தமிழ்நாட்டில் மொழிப்­­­­பாட ஆசிரியர்கள், கல்வியியல் கல்விக்கு (பி.எட்) இணையாகக் கருதப்படுகின்றனர்.

2012 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அரசு அறிவிப்பு ஆணையின்படி, “ஆசிரியர்களுக்குத் தகுதி காண் தேர்வு நடத்த வேண்டும்; மொழி ஆசிரியர்கள் குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்ட முடிவின்படி, தமிழ்ப்புலமைப் படிப்புகளில் தகுதி பெற்றவர்கள், கடந்த 2017 வரையிலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகுதித் தேர்வு எழுதி உள்ளனர். ஆனால், தற்போது தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு ஆணை 70 இல், ஆசிரியர் தகுதிகாண் தேர்வு 2019 இல், தமிழ்ப் புலவர்கள், தேர்வு எழுதுவதற்கான தகுதிப் பட்டியலில் இடம் பெற­வில்லை. இதனால், 40,000க்கும் மேற்பட்ட தமிழ்ப்புலவர்கள், தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ளவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்துள்ளனர். எனவே, தமிழக அமைச்சரவை இந்தப் பிரச்சினையில் விரைவில் முடிவு எடுத்து, தமிழ்ப் புலவர்கள் தகுதித் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும்,” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!