சென்னை: தமிழக மக்கள் மோடியை ஏற்காததால்தான் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஜி. பாஸ்கரன் தெரிவித்தார். மோடியைத் தமிழக மக்கள் ஏற்காததால்தான் மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போனோம். மானாமதுரை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாகராஜனுக்கும் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்கும் சேர்த்துதான் வேலை பார்த்தோம். ஆனால், அந்தத் தொகுதியில் நாகராஜனைவிட ஹெச்.ராஜா
20 ஆயிரம் வாக்குகள் குறைவாகத்தான் பெற்றார். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற புது வியூகம் அமைத்துள் ளோம். சிவகங்கை மாவட்ட குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க மாவட்ட ஆட்சியரிடம் பேசிவருவதாகவும் அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.

