எட்டு வழிச் சாலை மேல்முறையீட்டைக் கண்டித்து வாயை மூடி போராட்டம்

எட்டு வழிச் சாலை மேல்முறையீட்டைக் கண்டித்து வாயை மூடி போராட்டம்

1 mins read

சேலம்: சென்னை = சேலம் 8 வழிச்சாலை திட்டம் விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்வதைக் கண்டித்து

23 கிராம மக்கள் வாயில் துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் 8 வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடக் கோரி ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்தது. மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் 8 வழிச்சாலைத் திட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.