சென்னை: தமிழ்நாட்டில் எந்த நேரமும் சட்டமன்றத் தேர்தல் வரலாம் என்றும் அந்தத் தேர்தலில் 150 முதல் 180 தொகுதிகள் வரை திமுக வெற்றி பெற்றாக வேண்டும் என்றும் இந்தப் பிரம்மாண்ட வெற்றியைச் சாதிக்க தொண்டர்கள் தயாராக வேண் டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் திமுக குறிப்பிடத் தக்க வெற்றி பெற்றதை அடுத்து ஊக்கமடைந்து இருக்கும் கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுகவிற் கான அடுத்த இலக்கை நிர்ண யித்து உள்ளார்.
திமுகவின் மாவட்டச் செய லாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக் களின் கூட்டம் திங்கட்கிழமை சென்னையில் நடந்தது. அண்மை யில் நடந்த தேர்தலில் திமுக கூட்டணி ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுவிட்டது.
மொத்தம் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் அந்தக் கட்சி வெற்றி பெற முடியவில்லை. இது பற்றி விவாதிப்பதற்காக நடந்த அந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், இப்போதைய அதிமுக ஆட்சி எந்த நேரமும் தானாகவே கவிழக்கூடிய நிலை இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு சட்டமன்றத் தேர்தல் வந்தால் அதில் 180 தொகுதிகள் வரை திமுக பிடித்தால்தான் மக்களுக்கு நல்லாட்சியைத் தரமுடியும் என்று ஸ்டாலின் அடித்துக் கூறினார்.
இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் திமுக தோல்வி அடைந்ததற்கான காரணங்களாக மாவட்டச் செயலாளர்கள் கூறிய விளக்கங்களை எல்லாம் அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஏற்கவில்லை.
ஒன்பது தொகுதி தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்து உள்ளதாகவும் கட்சி வட்டாரங் கள் குறிப்பிட்டு உள்ளன.

