மின்வெட்டு: கைத்தொலைபேசி வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை

மின்வெட்டு: கைத்தொலைபேசி வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை

1 mins read

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் திங்கட்கிழமை இரவு நேரத்தில் திடீரென்று மூன்று மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் மருத்துவர்கள் கைத்தொலைபேசி வெளிச்சத்தில் பல நோயாளிகளுக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சைகளை நடத்தினர்.

மின்தடை நீடித்ததை அடுத்து மற்ற நோயாளிகளை அவர்கள் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டபோது மின்சாரத்தை உருவாக்கும் ஜெனரேட்டர் சாதனமும் பழுதாகி மின்சாரம் நின்றுபோனதால், ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அண்மையில்தான் நிகழ்ந்தது. இப்போது சிவகங்கை சம்பவமும் நிகழ்ந்துள்ளதால் பரபரப்பு கூடி உள்ளது.