பள்ளிக்கூடமாக மாறிய ரேஷன் கடை

பள்ளிக்கூடமாக மாறிய ரேஷன் கடை

1 mins read

ஒரத்தநாடு: தமிழ்நாட்டில் கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே ஒரு பள்ளிக்கூட கட்டடம் மிகவும் சேதமான நிலையில் இருந்ததால் ரேஷன் கடையில் வகுப்பு நடத்தி ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி, கருவிழிக்காடு கிராமத் தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளிக் கட்டடம் மிகவும் சேதம் அடைந்துவிட்டதால் அங்கு வகுப்புகளை நடத்த முடி யாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பள்ளியில் 30 மாணவ, மாணவிகள் பயில்கிறார்கள். இரண்டே இரண்டு ஆசிரியைகள் பணிபுரிகிறார்கள்.

கோடை விடுமுறைக்குப் பிறகு திங்கட்கிழமை கல்வி ஆண்டின் முதல் நாளன்று பள்ளி திறக்கப் பட்டபோது மாணவர்களும் ஆசிரி யைகளும் கட்டடத்தின் உள்ளே செல்லமுடியவில்லை. அதனால் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை வளாகத்தில் மாணவர் களுக்கு ஆசிரியைகள் பாடம் சொல்லிக் கொடுத்தனர்.

பிரச்சினை மேலிடத்திற்குச் சென்றதை அடுத்து உடனடியாக பள்ளிக்கூட கட்டடம் சரிசெய்யப் படும் என்று கல்வித் துறை அதி காரிகள் உறுதி தெரிவித்ததாக ஊடகத் தகவல்கள் கூறின.