சிங்கப்பூர் புறப்பட இருந்த விமானத்தில் கோளாறு

சிங்கப்பூர் புறப்பட இருந்த விமானத்தில் கோளாறு

1 mins read

திருச்சி: திருச்சியிலிருந்து திங்கட்கிழமை நள்ளிரவு 113 பயணிகளுடன் ஸ்கூட் விமானம் சிங்கப்பூருக்குப் புறப்பட இருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு முன்கூட்டியே கண்டறியப்பட்டது.

இதையடுத்து கோளாறு சரிசெய்யப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.