விதிமீறல்: இரண்டு மருத்துவக் கல்லூரிகளின் அனுமதி ரத்து

விதிமீறல்: இரண்டு மருத்துவக் கல்லூரிகளின் அனுமதி ரத்து

1 mins read

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இரு மருத்துவக் கல்லூரி கள் விதிகளை மீறியதால் நடப்பாண்டில் மாணவர்களைச் சேர்க்கக்கூடாது என்று இந்திய மருத்துவ மன்றம் அறிவித் துள்ளது. மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் 100 மாணவர்கள் பயிலும்போது 500 நோயாளிகளுக்கான படுக்கை வசதியும் 150க்கும் மேற்பட்டோர் மருத்துவம் பயிலும் கல்லூரிகளில் 750 நோயாளிகளுக்கான படுக்கை வசதியும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.

இதை மீறிய தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.