சுடச் சுடச் செய்திகள்

சென்னைக்கு ரயிலில் வரும் குடிநீர்

சென்னை: இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் சென்னை நகரம் குடிநீர் பிரச்சினையிலிருந்து மீள வில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இதுவரை சரியான தொலை நோக்குத் திட்டங்களும் வகுக்கப் படவில்லை. மழை நீரைத் தேக்கி வைக்க ஆறு, குளம், ஏரிகளும் தூர் வாரப்படவில்லை. இதனால் சென்னை மக்களை ஆண்டு தோறும் குடிநீர் பிரச்சினை திக்கு முக்காட வைக்கிறது.

இவ்வாண்டும் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பிரச்சினை மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இந்த நிலையில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. 

சென்னைக்கு அருகே  சிக்க ராயபுரம் உள்பட 22 குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்தி கரிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் குவாரி களிலும் தற்போது தண்ணீர் அளவு குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் சென் னையில் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக குறைந்து விட்டது. இதனால் கடந்த மாதம் முதல் சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினை மேலும் மோசமானது.

2001ல் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது ஈரோடு, நெய்வேலியில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டது. இதே போன்று தற் போது ரயிலில் சென்னைக்குக் குடிநீர் கொண்டு வருவது பற்றி அதிகாரிகள் ஆலோசித்தனர். 

ஜோலார்பேட்டை பகுதியில் பதிக்கப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள், ரயில் நிலையம் அருகில் இருப்பது கண்டறியப் பட்டது. இதையடுத்து  அங்கிருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் எடுத்து வர முடியும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள் ளன.

மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தற்போது வேலூர் மாவட் டத்துக்கு தினமும் 120 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அந்தக் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்படி வேலூர் வரை தினமும் 160 மில் லியன் லிட்டர் குடிநீரை கொண்டு வர முடியும். அதாவது கூடுதலாக 40 மில்லியன் லிட்டர் குடிநீரை தினமும் பெற முடியும். அந்த 40 மில்லியன் லிட்டர் குடிநீரில் 25 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னைக்கு ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து, ரயில் டேங்கர்கள் மூலம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 50 டேங்கர்கள் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்குக் குடிநீர் எடுத்து வரப்படவுள்ளது.

இதற்காக தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

டேங்கர் வாடகை, பம்பிங், சுத்திகரிப்பு, விநியோகம் உள்பட இந்தத் தண்ணீர் ஏற்பாடுக்கு தமிழக அரசுக்கு ரூ.154.3 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டுள் ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon