திருநங்கை திருமண கோரிக்கை

திருநங்கை திருமண கோரிக்கை

1 mins read

ஈரோடு: திருநங்கையர்கள் தங்களது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு கொடுத் துள்ளனர். "ஆலமரத் தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட திருநங்கையர் வசிக்கிறோம். எங்களில் சிலர் முறையாக திருமணம் செய்துள்ளோம். எங்கள் திருமணத்தை, சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியவில்லை.

ஆனால் அண்மையில் தூத்துக்குடி பதிவாளர் அலு வலகத்தில் ஒரு திருநங்கை திருமணம் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதேபோன்று ஈரோடு பதிவாளர் அலுவல கத்திலும் பதிவு செய்ய அணுகினோம். அதற்கான அரசாணை எங்களிடம் இல்லை எனக் கூறி பதிய மறுத்து விட்டனர். இதனால் எங்களுடைய திருமணத்தைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்," என்று ஆட்சியர் கதிரவனிடம் வழங்கிய மனுவில் திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.