இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை

இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை

2 mins read
Google News Preferred Icon

சென்னை: இசைஞானி இளைய ராஜாவின் பாடல்களை அவரது அனுமதியில்லாமல் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா தான் இசை யமைத்த பாடல்களுக்கு ராயல்டி கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனது பாடல் களை அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இளையராஜாவின் பாடல்களை அவரின் அனுமதி யின்றி யாரும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்காலத் தடையை உறுதி செய்தது. இளையராஜாவுக்கு அவரது பாடல்களின் உரிமையுள் ளது. அதனால் அவர் இசைய மைத்த பாடல்களை அவர் அனுமதியின்றி யாரும் பயன் படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு இளையராஜா தரப்பினருக்கு மகிழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. ஆனால் இளைய ராஜா பணம் (சம்பளம்) வாங்கி பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்தார். அந்த வகையில் தனது பாடல்களை தயாரிப்பாளர் களுக்கு அவர் விற்றுவிட்டார். தற்போது விற்கப்பட்ட பாடல் களுக்கு அவர் உரிமை கோருவது வேடிக்கையாக இருக்கிறது என்று ரசிகர்கள் சிலர் பொரு மியுள்ளனர். அப்படியென்றால் பாடல்களை எழுதியவர், பாடிய வருக்கு உரிமையில்லையா என்றும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். வயதான காலத்தில் அவருக்குப் பணம் தேவைப் படுகிறது என்று சிலர் சாடியுள் ளனர்.