இபிஎஸ், ஓபிஎஸ் ரமலான் வாழ்த்து

இபிஎஸ், ஓபிஎஸ் ரமலான் வாழ்த்து

1 mins read
Google News Preferred Icon

சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ் லாமியர்களுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவிபுரியுங்கள், சகோதரத்து வத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எம்ஜிஆர், அம்மா ஆகியோரது வழியில் எங்களது நெஞ்சம் நிறைந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறோம்," என்று தெரிவித்துள்ளனர்.