கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க வைகோ, ராமதாஸ் எதிர்ப்பு

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க வைகோ, ராமதாஸ் எதிர்ப்பு

1 mins read

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருட்களை தற்காலிக மாக சேமித்து வைக்க அங்கு அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது என பாமக, மதிமுக உள் ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் இம்முடிவால் மக்கள் அச்சத்தில் உறைந்திருப்ப தாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

"கடந்த 2011ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஜப்பானின் புகு‌ஷிமா அணுமின் நிலையத்தில் மிகப்பெரிய அள வில் கதிர்வீச்சு ஏற்பட்டது. லட் சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டனர். அதற்குக் காரணம் புகு‌ஷிமா அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணுசக்திக் கழிவுகள் முறையாக பராமரிக்கப் படாதது தான்.

"இதை உணராது கூடங்குளத் தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்பட்டால், ஜப்பானில் ஏற்பட்டது போன்ற கதிர்வீச்சு உள்ளிட்ட ஆபத்துகள் தென் தமிழகத்திலும் ஏற்பட வாய்ப் புண்டு," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக் கையில், கூடங்குளம் அணுமின் உலையில் அணுக்கழிவுகளை சரியாக கையாளாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமலும் அணுமின் உற் பத்தி நடப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

இதற்கிடையே மின் உற்பத்தி தொடங்கிய 17 நாளில் கூடங் குளம் அணுமின் நிலைய முதல் அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.