அழைத்துப் பேசாத முதல்வர்: அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி

சென்னை: சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அடைந்துள்ள தோல்வி அதிமுகவில் புதிய சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் தேர்தல் தோல்வி தொடர்பாக அமைச்சர்களையும் எம்எல்ஏக்களையும் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தி னார் முதல்வர் பழனிசாமி. ஆனால் கட்சி நிர்வாகிகள் யாரு டனும் அவர் நேரடியாகப் பேச வில்லை. இது புகைச்சலுக்கு வழிவகுத்துள்ளது.

முதல்வர் தங்களை நேரில் அழைத்துப் பேசாதது வருத்தம் அளிப்பதாக நிர்வாகிகள் பலரும் புலம்புவதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர் தல் நடைபெற்றது. இவற்றுள் 9 தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியது. திமுக வெற்றி பெற்ற 13 தொகுதிகளில், 12 தொகுதிகள் அதிமுக வசம் இருந்தவை.

இதனால் ஆட்சி கவிழ்வதற் கும் வாய்ப்புள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறி வருகின்ற னர். ஆனால் இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுகவின் மூத்த தலைவர்கள், பிரமுகர்களே கவலைப்படவில்லை என்று அந்த ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தேர்தலில் தோல்வி அடைந்தால் சம்பந்தப் பட்ட தொகுதிகளுக்கு பொறுப் பேற்றுள்ள அமைச்சர்கள், எம்எல் ஏக்கள் மட்டுமல்லாமல் கடைமட்ட கட்சி நிர்வாகிகளையும் அழைத்து பேசுவார். அதன் மூலம் தோல் விக்கு காரணமானவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பார்.

“அதனால் அமைச்சர்கள் முதல் கீழ்மட்ட நிர்வாகிகள் வரை அனைவருக்கும் கட்சித் தலைமை மீது பயமும் மரியாதையும் இருந் தது. ஆனால் இப்போது அமைச் சர்களும் எம்எல்ஏக்களும் நிர் வாகிகளுடன் எதுகுறித்தும் ஆலோசிப்பதில்லை.

“அமைச்சர்களும் எம்எல்ஏக்க ளும் தோல்விக்கான உண்மை யான காரணத்தை கூறப்போவ தில்லை. ஏனெனில் அதை தெரி வித்தால் அவர்களே சிக்கிக் கொள்வர். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து பேசியி ருந்தால் தோல்விக்கான காரணம் கட்சி தலைமைக்கு தெரிய வந்தி ருக்கும். அப்படி செய்யாததால் கட்சியின் அனைத்து மட்டத்திலும் அதிருப்தி அதிகரித்துள்ளது,” என்று அதிமுக நலன்விரும்பிகள் கூறுவதாக ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வரும் துணை முதல்வ ரும் ஆட்சியில் நீடிக்க அமைச்சர் களையும் எம்எல்ஏக்களையும் அனுசரித்துப் போவது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் அதிமுக நிர்வாகிகள் சிலர் கருதுவதாக தமிழக ஊடகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!