சென்னை: மரங்களைக் காப்பதற்கு என நாட்டிலேயே முதன்முறையாக புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங் கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 'சாசா' என்ற தனியார் நிறுவனம் இந்த நல்ல பணியில் ஈடுபட்டுள்ளது. புதிய மரங்களை நடுவது எந்தளவு முக்கியமோ, அதே போன்று வளர்ந்து நிற்கும் மரங்களைக் காப்பதும் முக்கியம் என்கிறார் இயற்கை ஆர்வலர் அப்துல் கனி.
'ட்ரீ ஆம்புலன்ஸ்' (Tree Ambulance) எனப்படும் இந்த மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை இலவசமாக வழங்கப்படு கிறது.
இயற்கை சீற்றங்களால் மரங் கள் வேரோடு சாய்ந்தாலோ, கட்டு மான பணிகளுக்காக மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என் றாலோ, இந்தச் சேவையை இலவசமாகப் பெற முடியும்.
குறிப்பிட்ட அந்த மரங்களை வேரோடு பெயர்த்து எடுத்து வேறொரு இடத்தில் பத்திரமாக நடுகிறார்கள்.
"'தன்னார்வ தொண்டாற்று வதில் விருப்பம் உள்ளவர்களை வைத்து இந்தச் சேவை வழங்கப் படுகிறது. ஆட்கள் இல்லாத இடங்களில் சிறிய இயந்திரங்கள் மூலம் மரங்கள் காப்பாற்றப் படுகின்றன.
"இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிலும் சென்னையில்தான் முதன்முறையாக இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண் டாடும் வகையிலேயே இந்தச் சேவை தொடங்கப்பட்டது," என்கி றார் அப்துல்கனி.
மரங்களை வேரோடு பெயர்த்தெ டுக்கும் ஹைட்ராலிக் இயந்திரங் கள் ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை என்பதால், அவற்றை வாங்குவதற்கு தனியார் நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று குறிப்பிடும் அவர், இந்த இயந்திரங்கள் மூலம் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங் களையும் கூட சுலபமாக தாய் மண்ணுடன் பெயர்த்து எடுத்து எவ்விதச் சேதமும் இன்றி மற்றொரு இடத்தில் நட முடியும் என்கிறார்.
உலக வெப்பமயமாதல், அத னால் ஏற்படும் வறட்சி, பேரழிவு ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் காடுகள் அழிக்கப்படுவதே ஆகும். இதிலிருந்து மக்கள் நிரந்தரமாக மீண்டு வருவதற்கு மரங்கள் வளர்ப்பது ஒன்றே நல்ல தீர்வு என்கிறார்கள் இயற்கை ஆர்வலர் கள். இத்தகைய சேவைப் பணியில் இளையர்களும் மாணவர்களும் பங்கேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

