தினகரனுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்கிறார் எம்எல்ஏ கலைச்செல்வன்

தினகரனுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்கிறார் எம்எல்ஏ கலைச்செல்வன்

1 mins read

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெய ரில் புதுக்கட்சியை பதிவு செய்தது முதல் தமக்கும் டிடிவி தினகரனுக் கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என அதிமுக எம்எல்ஏ கலைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

தாம் தினகரனுடன் இருந்த காலகட்டம் முடிந்துவிட்டது என் றும் அவர் கூறியுள்ளார்.

இரட்டை இலைச் சின்னம் எங்கு உள்ளதோ, தானும் அங்கு இருப்பது உறுதி என்று குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியை தாம் எப்போதுமே எதிர்ப்பதில்லை என் றார்.

"முதல்வரைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. நான் ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏவாகத் தான் பணியாற்றி வருகிறேன்.

"அவர் முதல்வராக வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் எனக்கு வாக்களித்தனர். ஜெய லலிதா தான் என்னை எம்எல்ஏ ஆக்கினார்," என்று கலைச் செல்வன் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வழிநடத்தும் அமமுக படுதோல்வி கண்டுள்ளது.

இதையடுத்து அவரது ஆதர வாளர்களாக இருந்த பலர் சத்த மின்றி அதிமுகவுக்குத் தாவி வரு கின்றனர். இதனால் தினகரனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அவருக்கு ஆதரவாக இருந்த கலைச்செல்வன் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்களும் தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளனர். இதனால் மீத முள்ள தினகரன் ஆதரவாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.