சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ததன் பின்னணி

சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ததன் பின்னணி

1 mins read

மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய் தத் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார். அவரை முன்கூட்டியே விடுதலை செய்தது மாநில அரசுதான் என தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் சில விவரங்களை சஞ்சய் தத் அடைக்கப்பட்டிருந்த ஏர்வாடா சிறை நிர்வாகத்திடம் கேட்டிருந்தார். சஞ்சய் தத்தை விடுவிக்கும் முன்பு மகாராஷ்டிர அரசு மத்திய அரசிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.