பதினைந்து டன் குப்பைகள் அகற்றிய தன்னார்வலர்கள்

பதினைந்து டன் குப்பைகள் அகற்றிய தன்னார்வலர்கள்

1 mins read

சென்னை: 'என்விரான்மென்டலிஸ்ட் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை, கோவை, டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில், குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் 'பூமிக்கான தன்னார்வ லர்கள்' என்ற பெயரில் நீர்நிலை மற்றும் கடற்கரை பகுதிகளில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியைச் செய்துள்ளது. இப்பணியில் 19 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

கடந்த 2ஆம் தேதியன்று காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை, வெறும் 2 மணி நேரத்தில் 7 நகரங்களிலும் 15 டன் குப்பையை இவர்கள் சேகரித்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

சென்னையில் மட்டும் 3,900 தன்னார்வலர்கள் 6 டன் குப்பைகளை அகற்றி உள்ளனர்.