விஜயபாஸ்கர்: மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை பணிகளில் தொய்வில்லை

விஜயபாஸ்கர்: மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை பணிகளில் தொய்வில்லை

1 mins read

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிலத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு இதுவரை ஒப்படைக்கவில்லை என்ற தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின்கீழ், திருநகரைச் சேர்ந்த வி.எஸ். மணி என்பவர் பெற்ற தகவல்களில் இதுவும் ஒன்று.

அந்த மருத்துவ மனைக்கான பூர்வாங்க பணிகள் மட்டுமே தொடங்கப் பட்டுள்ளன எனவும் கட்டட வரைபடம் இன்னும் முடிவாகவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு, "மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1,264 கோடி வழங்க ஒப்புதலாகி உள்ளது. பணியில் எந்தத் தொய்வும் இல்லை. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்ய டெல்லி மற்றும் ஜப்பானில் இருந்து 8 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவினர் வர உள்ளனர். தொழில்நுட்பக் குழுவினர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஆய்வு செய்கின்றனர்," என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.