தமிழகம்: குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.400 கோடி

சென்னை: பருவ மழை சரிவர பெய்யாததால் தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாகி விட்டது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து, ஏரி, குளங் கள் வறண்டுபோயுள்ள நிலையில் மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகி றார்கள்.

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக் கத் தமிழக அரசு ரூ.400 கோடியை ஒதுக்கி உள்ளது. பல நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டுக் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வாரியம் பல புள்ளிவிவரங்களை வெளி யிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 7.21 கோடி மக்களில், 4.23 கோடி பேருக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலமும் 2.98 கோடி பேருக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேட்டூர், பவானிசாகர், அமரா வதி, பெரியாறு, வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத் தனூர், சோலையாறு பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சிறுவாணி, பில்லூர் ஆகிய அணைகளை நம்பியே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் 556 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் உள்ளன.

குடிநீருக்குப் பயன்படுத்தப் படும் மின்மோட்டார்கள் குழாய்கள் போன்றவற்றை மாற்றி அமைக்க மாநிலப் பேரிடர் நிவாரண நிதி மூலம் ரூ.27 கோடியைத் தமிழக அரசு வழங்கி உள்ளது.

இதன்மூலம் 325 திட்டங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின் றன. 99 கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் ரூ.244 கோடி மதிப்பில் நடைபெறுகின்றன. 20 ஆண்டுக ளுக்கு முன்பு பொருத்தப்பட்ட பழைய குழாய்களை மாற்றியமைக் கும் பணியும் நடைபெறுகிறது.

குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்க ஆங்காங்கே கிணறு களில் இருந்தும் ஆழ்துளைக் கிணறுகள் மூலமும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறுவதைக் கண்காணிக்க 556 திட்டங்களும் 258 சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன என வாரியம் தெரிவித் துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!