‘மக்கள் ஆதரவுடன் எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும்’

சேலம்: அஸ்தம்பட்டியில் ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சிக்னல் வரை 6.8 கி.மீ. தூரத்துக்கு கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தின் முதல் பகுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். 2016ஆம் ஆண்டு இந்தப் பாலத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில், சேலம் தொகுதியின் (திமுக) எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்குச் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதிமுக, திமுகவைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றதையடுத்து இரு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் திரளாக நிகழ்ச்சி யில் கலந்துகொண்டனர். இத னால் இருதரப்பினரிடையே அவ் வப்போது மோதல்போக்கு தென் பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் வைக்க போலிஸ் மட்டுமின்றி ஆயுதப்படை காவல்துறையினரும், பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் எட்டு வழிச்சாலை அமைப்பது பற்றியும் கருத்துரைத் தார்.

சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் தொழில் வளம் நிறைந்த பகுதி. சென்னையில் இருந்து சேலம் வழியாக இந்த மாவட்டங்களுக்கும் கேரளா விற்கும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன என்றார் திரு பழனிசாமி.

“தற்போது உள்ள தேசிய சாலைகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் வாகனங்கள் தற்போது 300 விழுக்காடு பெருகி உள்ளது. இதனால் உலக தரத்தில் நவீன சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

“விபத்துகள் மூலம் உயிர் பலிகளைத் தடுக்க, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, தொழில் வளம் பெருக எட்டு வழிச்சாலை அவசியம். தற்போது சிலரின் எதிர்ப்பால் இந்தச் சாலை தொடர் பான வழக்கு நீதிமன்றத்தில் நிலு வையில் உள்ளது. மாநில அரசு மக்களிடம் எதையும் திணிக்காது, மக்களின் ஆதரவைப் பெற்று எட்டு வழிச்சாலை திட்டம் நிறை வேற்றப்படும்.

“இந்தச் சாலையால் புதிய தொழிற்சாலைகள் வரும், இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். சேலத்தில் ராணுவ உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை மத்திய அரசு அமைக்க உள்ளது. இதில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

“மற்ற மாநிலங்களை விடத் தமிழகம் உட்கட்டமைப்பில் முதன்மை மாநிலமாக உள்ளது. சாலைகள் தரமாக அமைக்கப் பட்டுள்ளது. மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் அரசாகத் தமிழக அரசு இருக்கும்” என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

இதனிடையே, “நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு அவசரகதியில் பாலம் திறக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணிகள் இன்னும் முழுமை யாக நிறைவடையவில்லை,” என்று திமுக எம்.பி. பார்த்திபன் குற்றஞ்சாட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!