எம்எல்ஏ ராஜன் செல்லப்பா:  அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை

மதுரை: அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று மதுரை வடக்குச் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பரபரப்புப் பேட்டியளித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் அதிமுக பொதுக்குழுவை உடனே கூட்ட ராஜன் செல்லப்பா வலியுறுத்தினார்.

கட்சியில் அதிகாரம் படைத்த ஒருவர் அதிமுகவுக்குத் தலைமை யேற்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது அதிமுகவில் யாருக்கும் இல்லை என்றும் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்டுப்பாடுடன் செயல்­பட்டிருந்தால் தேர்தலில் வென்றிருக்கும் என்றார்.

ஜெயலலிதாவை விட அதிக திட்டங்களை எடப்பாடிப் பழனிசாமி செயல்படுத்தி வருவதாக ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

அதிமுகவில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை அறிய முடியவில்லை என்றும் டிடிவி தினகரன் என்ற மாயை இப்போது இல்லை என்றும் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாருடன் 9 எம்எல்ஏக்களை ஜெயலலிதா சமாதிக்குச் செல்லாதது ஏன்?

9 எம்எல்ஏக்களைத் தடுத்து நிறுத்தியது யார் என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே மக்கள் மனதில் உள்ளதாகத் தெரிவித்த அவர், அதிமுகவுக்குப் பொதுச்­செயலாளர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராஜன் செல்லப்பா வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடியைப் பொதுச்செயலாளராக ஆக்குவது பற்றி பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அதிமுகவில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணிகள் முழுமையாக இணையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!