சுடச் சுடச் செய்திகள்

முதல்வர் பழனிசாமி: தொண்டர்களே கட்சியின் தலைவர்கள்

சென்னை: அதிமுக தொண்டர்களின் கட்சி எனவும், தலைவர் என்ற சொல்லுக்கே இடமில்லை எனவும், முதல்வர் எடப்பாடிப் பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று முதல்வர் எடப்பாடிப் பழனிசாமி, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியுள்ளாரே?

தெரியவில்லை. அந்தப் பேட்டியை முழுமையாகப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன். அதன்பிறகு தான் கருத்துச் சொல்ல முடியும்.

அதிமுகவில் கோஷ்டிப் பூசல் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

இது தவறான கருத்து. அமமுகவிலிருந்து எத்தனை பேர் அதிமுகவுக்கு வருகின்றனர். கோஷ்டிப் பூசல் இருந்தால் அவர்கள் வருவார்களா? எதிர்க்கட்சியினர் இதனைப் பரப்புகின்றனர். அதிமுக பலம் பொருந்திய கட்சி. அதனால் தான், இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வென்றுள்ளோம். தேர்தலுக்குப் பிறகு ஒரேயொரு எம்.பி. மட்டுமே ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார். இடைத்தேர்தலில் வென்றவர்கள் செல்லவில்லை. அவர்களைத் தடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளதே?

தவறான கருத்து. பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். நினைவிடம் அமைக்கும் பணிகள் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுத்தம் செய்தால் தான் அங்கு உள்ளே செல்ல முடியும். பணிகள் தடைபடக் கூடாது.

இடைத்தேர்தலில் அதிக இடங்களை வென்றதற்கும், மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி மட்டுமே ஜெயித்ததற்கும், இரட்டைத் தலைமை தான் காரணமா?

அதிமுக தொண்டர் கட்சி. தொண்டர்களால் ஆளுகின்ற கட்சி. இங்கிருக்கும் அனைவரும் தலைவர்கள்தான். தலைவர் என்ற சொல்லுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக தயாரா

என்ற கேள்விக்கு. அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்றார் முதல்வர் பழனிசாமி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon