ஆட்சியர் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் குரங்கு புகுந்து அட்டகாசம்

புதுக்கோட்டை: கஜா புயல் நிவாரணப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். மேலும் இந்தக் கூட்டத்தில் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பேசிக்கொண்டு இருந்தபோது, எதிர்பாராத வகையில் குரங்கு ஒன்று அரங்குக்குள் புகுந்து ஆங்காங்கே தாவி வேடிக்கை காட்டியது. வட்ட மேசையில் அங்குமிங்கும் தாவித் தாவி விளையாடிய குரங்கை அதிகாரிகள், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியேற்றினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon