சுடச் சுடச் செய்திகள்

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு ரூ.50,000 வழங்கிய தமிழிசை

சென்னை: மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்­வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவி ஜீவிதாவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து முதல் கட்டமாக 50,000 ரூபாய் நிதி உதவி வழங்கினார். மாணவி ஜீவிதா நீட்டில் வெற்றிபெற்றதை அடுத்து, அவரது மருத்துவப் படிப்பிற்கு உதவுவதாகத் தமிழிசை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜீவிதாவை நேரில் சந்தித்த தமிழிசை வாழ்த்துத் தெரிவித்து, நிதியை வழங்கினார். இதற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், எல்லாத் தரப்பு மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை ஜீவிதா நிரூபித்துள்ளதாகவும் தான் மருத்துவராகப் பணியாற்றி கிடைத்த பணத்தின் சேமிப்பில் இருந்துதான் ஜீவிதாவுக்கு நிதி வழங்கியதாகவும் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon