மதுரை - சிங்கப்பூர் விமானம் 15 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது

மதுரை - சிங்கப்பூர் விமானம் 15 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது

1 mins read

மதுரை: மதுரையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்குச் சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானம் 15 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. தினமும் இரவு 11.30 மணிக்குச் செல்லும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப கோளாறால் புறப்பட்டுச் செல்லவில்லை. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுச் சற்றுமுன் 163 பயணிகளுடன் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் புறப்பட்டது.