மாவட்டச் செயலர் கூட்டம்: அதிமுகவில் பெரும் பரபரப்பு

சென்னை: அதிமுகவில் கலகக் குரல்கள் எழுந்துள்ளதை அடுத்து நாளை மறுநாள் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதனால் அக்கட்சி வட்டாரங்களில் பல் வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பல்வேறு குழப்பங்களும் அதிரடித் திருப் பங்களும் ஏற்பட்டுள்ளன. அக் கட்சியில் ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலர் பதவி இன்னும் காலியாகவே உள்ளது.

இதையடுத்து தலைமை ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி என கூட்டுத் தலைமை யின் கீழ் அக்கட்சி இயங்குகிறது. எனினும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையேயான அதிகாரப் போட்டி என்பது திரைமறைவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இரு தரப்பினருமே கட்சியிலும் ஆட்சியிலும் தங்களது ஆதிக்கம் மிகுந்திருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி யால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சிக்கு இனி ஒற்றைத் தலைமைதான் தேவை என்றும், கூட்டுத் தலைமையால் முடிவு களை எடுப்பதில் தாமதம் ஏற் படுகிறது என்றும் மதுரை வடக்குத் தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாக குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரனும் குரல் எழுப்பியுள்ளார். அதே வேளையில் அமைச்சர்களோ ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக் கின்றனர். இதனால் அதிமுகவில் திரைக்குப் பின்னே நிகழ்ந்து வந்த அதிகார மோதலும் பதவிச் சண்டையும் தற்போது வெளியே தெரியத் துவங்கியுள்ளது.

அதிருப்தியாளர்களைச் சமா ளிக்க வேண்டிய நெருக்கடி முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது. எனவேதான் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தைக் கூட்ட முதல்வர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இரட்டைத்தலைமை இருந்தா லும் ஆட்சி நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதாக அமைச்சர் கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஜெயலலிதா இல்லாத காரணத்தினால்தான் ராஜன் செல்லப்பா போன்றவர்கள் தங்கள் இஷ்டம்போல் பேசிக் கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.

இரட்டைத் தலைமையை எதிர்க்கும் ராஜன் செல்லப்பா, சம்பந்தப்பட்ட இருவரும் பொறுப் புகளுக்கு நியமிக்கப்பட்டபோது ஏன் எதிர்க்கவில்லை? எனக் கேள்வி எழுப்பி உள்ளார். ஜெயலலிதா இருந்திருந்தால் இவர் வாயைத் திறந்திருப்பாரா? என்றும் கேட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!