மலேசியாவில் இருந்து போலிக் கடப்பிதழில் வந்த ஆடவர் கைது

சென்னை: மலேசியாவில் இருந்து போலிக் கடப்பிதழ் மூலம் நாடு திரும்பிய ஆடவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 

அவரது பெயர் செபாஸ்டியன் என்பதும் திண்டுக்கல்லைச் சேர்ந் தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. இதையடுத்து சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று முன் தினம் மலேசியாவில் இருந்து நாடு திரும்பிய 40 வயதான செபாஸ்டியன், போலிக் கடப் பிதழ் வைத்திருப்பதைக் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டபோது போலி இந்தியக் கடப்பிதழை மலேசியாவில் பெற்றதாகவும், அதற்காக இந்திய மதிப்பில் 3 லட்சம் ரூபாய் வரை செலவிட்ட தாகவும் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து மலேசியாவில் உள்ள போலிக் கடப்பிதழ் முகவர் களுக்கு சென்னையில் உள்ள கும்பல்களுடன் தொடர்புள்ளதா எனும் கோணத்தில் போலிசார் தங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 

சில வாரங்களுக்கு முன்புதான் போலி கடன்பற்று அட்டைகள் விநியோகித்த குற்றத்தின் பேரில் பல்கேரியாவைச் சேர்ந்த இரு ஆடவர்களை சென்னை போலிசார் கைது செய்தனர். 

இதேபோல் மோசடி வேலைக ளில் ஈடுபட்ட ருமேனியா நாட்டைச் சேர்ந்த 2 ஆடவர்கள் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் கைது செய்யப்பட்டனர். 

இதையடுத்து போலிக் கடப் பிதழ் விவகாரத்திலும் போலிசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். செபாஸ்டியன் மீது போலிக் கடப்பிதழ் தொடர் பாக வழக்குப் பதிவாகி உள் ளது. அவர் நீதிமன்றத்தில் முன் னிலைப்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் இருந்து மலேசி யாவுக்கு சுற்றுலா விசாவில் செல் பவர்கள், விசா காலம் முடிந்த பிறகும் அங்கேயே முறைகேடாக தங்குகின்றனர். எனவே பழைய கடப்பிதழை வைத்து நாடு திரும்பு வது கடினம் என்பதால் இவ்வாறு போலி கடப்பிதழ்களைப் பெற்று நாடு திரும்புவதாகக் கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon