அணுக்கழிவு மையம் அமைக்க தெளிவான திட்டம் வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்து

அணுக்கழிவு மையம் அமைக்க தெளிவான திட்டம் வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்து

2 mins read

சென்னை: நிரந்தர அணுக்கழிவு மையம் அமைப்பது குறித்து மத் திய அரசு தெளிவான திட்டத்தை உருவாக்கும் வரை கூடங்குளத் தில் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அணுக்கழிவு மையம் அமைப் பது தொடர்பாக நடக்கும் கருத் துக்கேட்புக் கூட்டத்தில் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்வர் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில் கடந்த மே 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும், அப்போது 15 கட்டளைகளை நீதிமன்றம் பிறப்பித்தது என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.

அவற்றுள் அணுக்கழிவுகளை, உலைக்கு வெளியே வைப்பதற் கான வசதியை ஐந்து ஆண்டு களில் ஏற்படுத்த வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை என்றும், அது இன்னும் நிறை வேற்றப்படவில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

"இந்நிலையில் எதிர்வரும் 2022க்குள் அணுக்கழிவுகள் சேமிப்பு மையத்தை கட்டி முடிக்க உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்துள்ளது. கூடங்குளம் வளாகத்திற்கு உள்ளேயே, அணுக் கழிவுகள் சேமிப்பு மையம் கட்ட அடுத்த மாதம் ராதாபுரத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

"இது பேரதிர்ச்சி அளிக்கிறது. கூடங்குளத்தில் அணுக்கழிவுகள் சேமிப்பு மையம் அமைக்க, தமி ழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது," என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விஷயத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிக்கையை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் வைத்து, அணுக்கழிவுகள் சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப் பதற்கு அப்பகுதி மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சித் தலைவர்களும் குரல் எழுப்பி உள்ளனர்.