புதுக்கோட்டை: தேர்தலில் படுதோல்வி கண்டபிறகு அமமுகவில் இருந்து பலரும் பிற கட்சிகளுக்குத் தாவி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் அதிமுகவில் மீண்டும் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
அமமுக வட்டாரங்கள் சோர் வடைந்துள்ள நிலையில், சசிகலா வுக்கும் தினகரனுக்கும் எக்காலத் திலும் அதிமுகவில் இடமில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதால் தங்களுக்கு எந்தவிதக் கவலையும் இல்லை என்று புதுக்கோட்டையில் செய்தி யாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
"சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் நேராக வீட்டுக்குத்தான் செல்லவேண்டும். அவரையும் தினகரனையும் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் அதிமுகவில் சேர்த்துக்கொள் வோம்," என்றார் அமைச்சர் சீனிவாசன்.
இந்நிலையில் அமமுகவின் கன்னியாகுமரி மாவட்ட அமைப்புச் செயலராகப் பொறுப்பு வகித்து வந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால் கருத்துவேறுபாடு காரணமாகத் தினகரனை விட்டு விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

