சுடச் சுடச் செய்திகள்

தாமதித்த அதிகாரி: வெற்றிலை, பாக்கு தாம்பூலத்துடன் வரவேற்பு

மன்னார்குடி: மன்னார்குடியை அடுத்துள்ள பேரையூர் கிராமத்தில் வடவாறு வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் புகார் எழுப்பி உள்ளனர். 

இதையடுத்து திமுக எம்எல்ஏ ராஜாவுடன் கிராம நிர்வாக அலுவலகத்துக்குச் சென்று வாய்க்காலை ஆய்வு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் நிர்வாக அலுவலர் வராததால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். 

அப்போது கையில் தாம்பூலத் தட்டை ஏந்தி அதில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து நிர்வாக அலுவலருக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து நிர்வாக அலுவலர் நேரடியாகச் சென்று வாய்க்கால் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon