உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் சிகிச்சைப் பலனின்றி இன்று மரணமடைந்தார். பிரபல நகைச்சுவை நாடக நடிகராகவும் மக்கள் மனம் கவர்ந்த வசனகர்த்தாவாகவும் 66 வயது கிரேஸி மோகன் விளங்கினார்.
உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
1949ஆம் ஆண்டு பிறந்த கிரேஸி மோகன், தமிழ்த் திரையுலகில் வசனகர்த்தாவாகவும் நடிகராகவும், நாடக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
பொறியாளரான இவர், 'பொய்க்கால் குதிரை' படத்தின் மூலம் வசனகர்த்தாவாக திரையுலகில் அறிமுகமானார்.
அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை - வசனகர்த்தாவாகவும் கிரேஸி மோகன் பணியாற்றியுள்ளார்.

