இலவச குடத்துடன் இலவச குடிநீரும் வழங்கிய ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு இலவசமாக பிளாஸ் டிக் குடங்களை வழங்கி  தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீரையும் விநியோகம் செய்தார்.  

தமிழகம் முழுவதும் பொது மக்களின் குடிநீர்„ தேவையைப் பூர்த்தி செய்ய திமுகவினர் முன் வரவேண்டும் என்று மு.க.ஸ்டா லின் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர் கள், கட்சி நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட் டிருந்தார்.

இந்நிலையில், அதன்படி பேப்பர் மில் சாலை, பெரியார் நகர், ஜி.கே.எம்.காலனி, ஜம்புலிங்கம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இல வச குடங்கள் வழங்கப்பட்டு குடி நீர் விநியோகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கொளத் தூர் தொகுதி மக்களின் பிரச் சினைகள் குறித்தும் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon