தமிழிசை மகன்: தமிழகத்தில் பாஜக வெற்றிபெறாது

சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் மகன் சுகநாதன், “பாஜகவால் ஒருகாலத்திலும் ஒரு தொகுதியில் கூட  வெற்றி பெறவே முடியாது,” என்று  தமிழிசை முன்னிலையில் பாஜகவுக்கு எதிரான கோஷங் களை முழங்கியதால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியுற்றனர். 

தமிழிசை நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த அவரது மகன் சுகநாதன்,  பாஜக வுக்கும் தமிழிசைக்கும் எதிராக முழக்கமிட்டார். 

“தமிழகத்தில் பா.ஜ.க ஒரு தொகுதியில்கூட ஜெயிக்காது,” என்றும் அவர் கத்தினார்.

தமிழிசை மகனே பொது இடத் தில் பாஜகவுக்கு எதிராக கோஷ மிட்டது பரபரப்பாக இருந்தது.  

இதைத்தொடர்ந்து தமிழிசை யின் ஆணைக்கேற்ப அவருடைய பாதுகாவலர்கள் சுகந்தனைத் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர். 

இதுகுறித்துச் செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த தமி ழிசை, தனக்கும் தனது மக னுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருப்பதாகவும் இதன் காரணமாகவே தனது மகன் பாஜகவிற்கு எதிராக முழக்க மிட்டதாகவும் விளக்கமளித்தார்.

மேலும் அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்த கேள்விக்கு “இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம், அதுகுறித்து தான் கருத்துத் தெரிவிக்க விரும்ப வில்லை,” எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமி ழகத்தில் பாஜக ஒரு தொகுதி யில்கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon