தங்க நகையை உரியவரிடமே ஒப்படைத்த துப்புரவு ஊழியர்

தங்க நகையை உரியவரிடமே ஒப்படைத்த துப்புரவு ஊழியர்

1 mins read
30dfaea0-f017-465c-81af-4aca18fe5e09
துப்புரவு ஊழியர் முருகம்மாள். படம்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

ஆதம்பாக்கம்: தனக்கு இலவச மாக கொடுத்த பொருளுடன் தங்க நகையும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் ஒருவர் அந்த நகையை உரிமையாளரிடம் திருப்பி ஒப் படைத்துள்ளார். இதை அறிந்த பலரும் அந்தப் பெண்ணின் நேர்மையைப் பாராட்டினர்.

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், ராமகிருஷ்ண புரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஜெனிதா, 35.

இவர் ஒருசில தினங் களுக்கு முன் தனது சேலை உள்ளிட்ட துணிகளை சைதாப் பேட்டையைச் சேர்ந்த முருகம் மாள், 42, என்ற துப்புரவு ஊழி யருக்குக் கொடுத்துள்ளார்.

நேற்று பையில் இருந்த துணிகளை முருகம்மாள் பிரித் துப் பார்த்தபோது அதில் இருந்த சிறிய நகை பெட்டியில் இரண்டு பவுன் தங்கநகை இருந்தது.

யார் துணி தந்தார்கள் என யோசித்து நகையுடன் ஜெனிதா வீட்டுக்குச் சென்று நகையை ஒப்படைத்தார்.