'கோயில்களில் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை'

'கோயில்களில் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை'

1 mins read

சென்னை: தமிழக அரசின் அனு மதியின்றி கோயில்களில் வாக னங்களை நிறுத்துவதற்கு கட்ட ணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

சென்னையை அடுத்த பெரிய பாளையம் பவானியம்மன் கோயி லில் மாயாண்டி என்பவர் வாக னங்களை நிறுத்துவதற்கு கட்ட ணம் வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதி மன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உத்தரவில் உரிய ஒப்பந்தம் இன்றி கோயில்களில் 'பார்க்கிங்' கட்டணம், நுழைவுக் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமாகும் என்று தெரிவித்துள்ளது.