சுடச் சுடச் செய்திகள்

‘நாம் தேர்வு செய்தவரே  அதிமுக தலைவராக வேண்டும்’ 

மதுரை: அதிமுகவின் எதிர் காலம் சிறப்பாக அமைய வலு வான ஒரே தலைமையின் கீழ் ஆட்சி நடைபெறவேண்டும் என்று மதுரை வடக்குத் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

“நாம் தேர்வு செய்தவரே அதிமுகவின் தலைவராக செயல்பட வேண்டும்,” என்றும் அவர் மேலும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.  

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரு வரின் கீழ் நடந்த ஆட்சியின் காரணமாகவே  நடந்து முடிந் துள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக மண்ணைக் கவ்வி யுள்ளது என்றும் அவர் கடு மையாக விமர்சித்திருந்தார். 

இந்நிலையில், திருப்பரங்குன் றத்தில் தனது ஆதரவாளர் களுடன் நேற்று அவர் திடீர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதில் அரசியல் நிலவரம் குறித்தும் அடுத்தகட்ட நட வடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.

அப்போது அதிமுகவுக்கு நாம் கொண்டு வந்தவரே தலை வராக இருந்து ஆட்சியை நடத்தவேண்டும் என்று பேசி யது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ராஜன் செல் லப்பாவின் ஒற்றைத் தலைமை கருத்துக்குப் பின்னர், கட்சி நிர்வாகிகள் யாரும் தேவையற்ற கருத்துகளைச் சொல்லக்கூடாது என அதிமுக தலைமை கட்டுப் பாடு விதித்திருந்தது. 

ஆனால், இந்த கட்டுப்பாடு உத்தரவையும் மீறி ராஜன் செல் லப்பா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அவரது நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்துகொண்டு ஆலோசித்தது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந் தித்த நிலையில், இந்த தோல்விக்கு இரட்டைத் தலைமையும் ஒரு காரணம் என்று ராஜன் செல்லப்பா கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே “நடந்தவை நடந் தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக் கட்டும். கட்சியின் நிர்வாக முறை பற்றியோ, தேர்தல் வெற்றி, தோல்வி குறித்தோ அதிமுக நிர்வாகிகள் பொதுவெளியில் பேசவேண்டாம். இதுகுறித்துப் பேச பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் உள்ளன. இதில் உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்,” என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டனர். 

மேலும் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய உறுப் பினர்கள் கூட்டம் நாளை 12ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே ராஜன் செல்லப்பா வின் மகனும் மதுரை மக்களவைத் தேர் தலில் தோல்வியடைந்தவரு மான ராஜ் சத்யனும் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் செய்தியாளர் களிடம் பேசிய செல்லப்பா கூறுகை யில், “ஒற்றைத் தலைமையில் அதிமுகவை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்லவேண்டும். இரண்டு தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்குத் தேர்ந்து எடுக்கவேண்டும்,” என்று தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்து தமிழக அரசியலில் புய லைக் கிளப்பி விட்டுள்ளது. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon