மகள் காதல் திருமணத்துக்கு தந்தையின் கண்ணீர் அஞ்சலி

மகள் காதல் திருமணத்துக்கு தந்தையின் கண்ணீர் அஞ்சலி

1 mins read

ஆம்பூர்: பொதுவாகவே வீட்டை விட்டு வெளியேறி காதல் திரு மணம் செய்துகொள்ளும் பிள் ளைகளை, நீ இறந்துவிட்டாய் என்று நினைத்துக் கொள்வதாக கோபத்தில் பெற்றோர் திட்டுவது இந்தியாவில் வழக்கம்தான்.

இதுபோல் தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதில் துளியும் விருப்ப மில்லாத தந்தை ஒருவர் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை தெரு வெங்கும் ஒட்டி தனது வெறுப் பைக் காட்டியுள்ளார்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மகள் இறந்துவிட் டதாக கூறி கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டியுள்ளார் தந்தை.