தீவிபத்தால் இருளில் மூழ்கின 100க்கும் மேலான கிராமங்கள்

தீவிபத்தால் இருளில் மூழ்கின 100க்கும் மேலான கிராமங்கள்

1 mins read

பெரம்பலூர்: அரியலூர் துணைமின் நிலையத்தில் தீவிபத்து ஏற் பட்டதன் காரணமாக மின்சாரம் தடைபட்டு 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வரும் மின்சாரத்தை பிரித்து வழங்கக்கூடிய 110 கிலோ வாட் மின்மாற்றியில் நேற்று முன் தினம் இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அரியலூர், செந்துறை, கீழப்பாவூர், தேளூர், நடுவலூர் ஆகிய துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கு வது தடைப்பட்டது. இதனால் 100 கிராமங்கள் இருளில் மூழ்கின. இதையடுத்து மின்மாற்றியை மாற் றும் முயற்சி நடந்து வருகிறது.