சுடச் சுடச் செய்திகள்

முதல் கட்டமாக 500 மின்சார பேருந்துகள் சென்னை, மதுரை, கோவையில் இயக்கப்படும்

இந்திய மத்திய அரசின் மானியத்தில் முதல் கட்டமாக சுமார் 500 மின்சார  பேருந்துகளை சென்னை, மதுரை மற்றும் கோவை போன்ற நகரங்களில் இயக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

அப்போது போக்குவரத்துத்துறை தலைமை போலிஸ் அதிகாரி சி.சமயமூர்த்தி உட்பட பல அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இரண்டாயிரம் மின்சார  பேருந்துகளும் 12,000 ‘பி.எஸ்-6’ ரக  பேருந்துகளும் இயக்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னை அடையாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தபின் பேட்டியளித்த அமைச்சர், தமிழகம் முழுவதும் இயக்கப்படும் 32,576 பள்ளி வாகனங்களில் 31,143 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

அவற்றில் 1,009 வானகங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவற்றை சரி செய்த பின்னர்தான் இயக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

மீதமுள்ள வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபின் தான் அந்த பஸ்களில் பள்ளி குழந்தைகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon