மன்னார்குடி: எதிர்வரும் உள் ளாட்சித் தேர்தலில் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிடும் என சசிகலாவின் சகோதரர் திவா கரன் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றதற்கு ஆண்டவன்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
ஆட்சியில் நீடிக்கத் தேவை யான 9 இடங்களில் மட்டும் சொல்லி வைத்தாற்போல் வெற்றி பெற்றது எப்படி? என்றும் அவர் சந்தேகம் எழுப்பினார்.
"தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் அதிமுகவுக்கு இறங்கு முகமாக உள்ளது.
"தினகரன் ஒரு அழிவுசக்தி. அவரை சார்ந்து வந்தவர்களை ஆட்டு மந்தை போல் நடத்தினார். அதில் இருந்து விடுபட்டு ஒவ்வொருவராக வேறு இயக்கங் களுக்குச் செல்ல காரணமும் தினகரன்தான்," என்றார் திவாகரன்.
தமிழக ஆட்சியாளர்கள் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், விளைநிலங்களில் எரிவாயுக் குழாய் பதித்தல், எட்டு வழிச்சாலை திட்டம் போன்ற அபாயகரமான திட்டங்களின் ஆபத்தை உணரா மல் செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அமைச்சர்கள் அனைவரும் ஆட்சியாளர்களுக்கு காவடி தூக்குவதாக விமர்சித்தார்.
"அமைச்சர்கள்தான் இப்படி என்றால், எம்எல்ஏக்களும் ஏன் துணை போகிறார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா மறைந்தபோதே அதிமுகவுக்கு நெருக்கடி காலம் தொடங்கி விட்டது. அதன் வீழ்ச்சியை ஒத்துக்கொண்டு அனைவரையும் ஒருங்கிணைக்கவேண்டும்.
"நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக நிர்வாகிகளின் சொந்தங் களுக்கே தொகுதி வழங்கப்பட்டது. அதிமுகவுக்கு ஆளும் கட்சி என்ற தகுதியைத் தவிர வேறு என்ன தகுதி உள்ளது?
"மத்திய அரசைக் கண்டு பயப்படுபவர்கள் ஆட்சியில் இருந்து விலக வேண்டும்," என்றார் திவாகரன்.

